search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மசாஜ் சென்டர்"

    • மும்பையைச் சேர்ந்த 30 வயது பெண், திருப்பூர் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஆகியோரை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
    • திருப்பூர் குமரன் ரோட்டில் ஒரு ஓட்டலில் உள்ள அறையில் மசாஜ் சென்டர் நடந்து வந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் குமரன் ரோட்டில் ஒரு ஓட்டலில் உள்ள அறையில் மசாஜ் சென்டர் நடந்து வந்தது. இந்த சென்டரில் விபசாரம் நடப்பதாக திருப்பூர் வடக்கு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கொங்கு நகர் உதவி போலீஸ் கமிஷனர் அனில் குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் சம்பந்தப்பட்ட மசாஜ் சென்டரில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் அந்த மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது.

    அங்கிருந்து மும்பையைச் சேர்ந்த 30 வயது பெண், திருப்பூர் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஆகியோரை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மசாஜ் சென்டர் நடத்தி வந்த திருப்பூர் பி.என். ரோடு பகுதியை சேர்ந்த மோகன் (வயது 30) என்பவரை வடக்கு போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    • கே.வி.ஆர்.நகரை சேர்ந்த காளிஸ்வரன் (27), ஆனந்த் (26) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • இன்ஸ்பெக்டர் பதுர்நிஷா பேகம் மற்றும் போலீசாரை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு பாராட்டினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மங்கலம் ரோடு வெங்கடாசலபுரம் 3-வது வீதியில் உள்ள மசாஜ் சென்டரில் கடந்த 1-12-2022 அன்று மாலை 4 பேர் கொண்ட கும்பல் புகுந்து அங்கிருந்த பெண் ஊழியர்களை கத்தியால் தாக்கி பணம் கேட்டு கொலைமிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து திருப்பூர் ஆண்டிப்பாளையத்தை சேர்ந்த சையது முகமது இக்ரம் (வயது 26), தெற்கு ேதாட்டத்தை சேர்ந்த கார்த்திக் (27), கே.வி.ஆர்.நகரை சேர்ந்த காளிஸ்வரன் (27), ஆனந்த் (26) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. சையது முகமது இக்ரம், கார்த்திக், காளிஸ்வரன், ஆனந்த் ஆகிய 4 பேருக்கு தலா 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பாலு தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார். சிறப்பாக செயல்பட்ட மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்ரா, சிறந்த முறையில் சாட்சிகளை விரைந்து ஆஜர் செய்த இன்ஸ்பெக்டர் பதுர்நிஷா பேகம் மற்றும் போலீசாரை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு பாராட்டினார்.

    • ஒரு மசாஜ் சென்டரில் விபசாரம் நடந்து கொண்டிருந்தபோதே கையும் களவுமாக போலீசார் மடக்கி பிடித்தனர்.
    • பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் அங்கிருந்த மற்றொரு ஸ்பா மற்றும் மசாஜ் சென்டரில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. இங்கு சில தனியார் விடுதிகளில் மசாஜ் சென்டர்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த மசாஜ் சென்டர்களில் பெண்களை வைத்து விபசாரம் நடைபெற்றது. மசாஜ் சென்டர்களுக்கு வரும் வாலிபர்கள், மாணவர்களிடம் இளம்பெண்களை வைத்து மயக்கி பல ஆயிரம் ரூபாய் பறித்துள்ளனர்.

    இதுகுறித்து அங்குள்ள போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    நேற்று இரவு பஞ்சாராஹில்ஸ் பகுதியில் உள்ள விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது ஒரு மசாஜ் சென்டரில் விபசாரம் நடந்து கொண்டிருந்தபோதே கையும் களவுமாக போலீசார் மடக்கி பிடித்தனர்.

    மசாஜ் சென்டரில் இருந்து ஆணுறை பாக்கெட்டுகள், ஏ.டி.எம். கார்டுகள் பயன்படுத்தப்படும் ஸ்வைப் எந்திரம் மற்றும் ரூ. 32 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    அங்கிருந்த 14 வாடிக்கையாளர்கள் தாங்கள் மிகவும் கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இனிமேல் இப்படி செய்ய மாட்டோம் என போலீசாரிடம் கெஞ்சினர். ஆனாலும் அவர்களை விடவில்லை. மசாஜ் சென்டர் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அங்கிருந்த 4 பெண்களை மீட்டனர். வாடிக்கையாளர்கள் 14 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    இதைத் தொடர்ந்து பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் அங்கிருந்த மற்றொரு ஸ்பா மற்றும் மசாஜ் சென்டரில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.

    அப்போது விபசாரத்திற்கு தள்ளப்பட்ட 10 பெண்களை மீட்டனர். அங்கிருந்த 18 வாடிக்கையாளர்களும் சிக்கிக்கொண்டனர். இந்த மசாஜ் சென்டர் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஒரே இரவில் 14 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் வாடிக்கையாளர் 32 பேரை தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

    • திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்யபிரியா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    • மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார்.

    திருச்சி:

    திருச்சி மாநகரத்தில் செயல்படும் ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் நடப்பதாக புகார்கள் வருகின்றன. அவ்வப்போது விபச்சார தடுப்பு பிரிவு போலீசாரும் மேற்கண்ட மையங்களில் அதிரடி சோதனை நடத்தி அப்பாவி பெண்களை மீட்டு வருகின்றனர். இந்நிலையில் பாலியல் தொழிலை தடுக்க தவறியதாக, திருச்சி மாநகர விபச்சார தடுப்பு பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜ்மோகன், பால சரஸ்வதி, ஏட்டு அசாலி ஆகிய மூவரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து, திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்யபிரியா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    கடந்த இரு தினங்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலக சாலையில் மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் வெளி மாநில அழகி உட்பட 3 பேர் மீட்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

    • நாமக்கல்லில் உள்ள சேலம் ரோட்டில் ஒரு மசாஜ் சென்டர் இயங்கி வருகிறது.
    • நாமக்கல் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அதிரடியாக மசாஜ் சென்டரில் நுழைந்து சோதனை நடத்தினர் .

    நாமக்கல்:

    நாமக்கல்லில் உள்ள சேலம் ரோட்டில் ஒரு மசாஜ் சென்டர் இயங்கி வருகிறது. இந்த மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து விபசாரம் செய்வதாக புகார்கள் எழுந்தது. அதன் அடிப்படையில் நாமக்கல் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர பாண்டியன் மற்றும் போலீசார் நேற்று அதிரடியாக மசாஜ் சென்டரில் நுழைந்து சோதனை நடத்தினர் .

    அப்போது மசாஜ் செய்வதாக கூறி ஆசையை தூண்டி சில பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதை அடுத்து மசாஜ் சென்டரின் உரிமையாளரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள யாக்கோபுரத்தை சேர்ந்த ராஜேஷ் குமார் (வயது 27) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாமக்கல் சிறையில் அடைத்தனர்.

    • வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பி வாடிக்கையாளர்களை வரவழைப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • மசாஜ் செய்ய வருபவர்களை ஆசை வார்த்தைகள் கூறி விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் அவினாசி ரோடு கீரணி சந்திப்பு அருகே உள்ள கட்டிடத்தின் மேல்மாடியில் மசாஜ்சென்டர்செயல்பட்டு வருவதாகவும் இங்கு இளம் பெண்களை வைத்து விபச்சாரம் செய்வதா கவாவும் மேலும் வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பி வாடிக்கையாளர்களை வரவழைப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து திருப்பூர் வடக்கு போலீசார் சம்பந்தப்பட்ட மசாஜ் சென்டரில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அங்கு 5 பெண் கள், 2 ஆண்கள் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் சென்னை, மதுரை ஆகிய பகுதிகளில் இருந்து இளம் பெண்களை வரவைத்து அவர்கள் மூலம் மசாஜ் செய்ய வருபவர்களை ஆசை வார்த்தைகள் கூறி விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதனையடுத்து மசாஜ் சென்டர் நடத்திய செந்தமி ழ்ச்செல்வன், ஜெகதீசன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ஐந்து இளம் பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    • இளம்பெண் தனது கணவரிடம் வேலைக்கு செல்வதாக கூறினார்.
    • இளம்பெண் மசாஜ் சென்டருக்கு வரும் ஆண்களுடன் வெளியே சென்று உல்லாசமாக இருப்பது தெரியவந்தது

    கோவை

    கோவை கே.ஜி.சாவடியை சேர்ந்த 30 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவர் ரெயில்வே ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    நள்ளிரவு

    இந்தநிலையில் இளம்பெண் தனது கணவரிடம் வேலைக்கு செல்வதாக கூறினார். இதனையடுத்து அவரை அவரது கணவர் வேலைக்கு செல்ல அனுமதித்தார். ஆனால் இளம்பெண் தினசரி நள்ளிரவில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். இதனை அவரது கணவர் கண்டித்தார்.

    இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. தினசரி வேலை முடிந்து வீட்டிற்கு வரும் இளம்பெண் மிகவும் சோர்வாக காணப்பட்டார். அவர் தனது குழந்தைகளையும் கவனிக்காமல் இருந்தார். இதனால் இளம்பெண்ணின் நடத்தையில் அவரது கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தனது மனைவி எங்கே வேலை செய்கிறார். என்ன வேலைக்கு செல்கிறார் என்பதை கண்காணிக்க திட்டமிட்டார்.

    பல ஆண்களுடன் உல்லாசம்

    அதன்படி அவர் வேலைக்கு செல்லும் போது பின் தொடர்ந்து சென்று கண்காணித்தார். அப்போது இளம்பெண் தனது கணவருக்கு தெரியாமல் மசாஜ் சென்டரில் வேலை பார்ப்பதும், அவருக்கு பல ஆண்களுடன் கள்ளத்தொடர்பு இருப்பது ெதரிய வந்தது.

    இளம்பெண் மசாஜ் சென்டருக்கு வரும் ஆண்களுடன் வெளியே சென்று உல்லாசமாக இருந்து விட்டு நள்ளிரவு வீட்டிற்கு வருவது தெரிய வந்தது.

    ஓட்டம்

    இதுகுறித்து அவர் இளம்பெண்ணிடம் கேட்டார். அப்போது கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று இளம்பெண்ணின் கணவர் வழக்கம் போல வேலைக்கு சென்றார். வீட்டில் இருந்த இளம்பெண் கணவரிடம் கோபித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்.

    இது குறித்து இளம்பெண்ணின் கணவர் கே.ஜி.சாவடி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள். 

    • அறைக்கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.
    • போலீசார் கதவை தட்டி உள்ளே இருந்தவர்களை அழைத்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக வடக்கு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    விபசாரம் :

    இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட மசாஜ் சென்டருக்கு சென்றனர். அப்போது அங்குள்ள அறைக்கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. உள்ளே 2 இளம்பெண்கள், 2 ஆண்கள் சென்றதாக அருகில் இருந்த பொதுமக்கள் சிலர் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் கதவை தட்டி உள்ளே இருந்தவர்களை அழைத்தனர். ஆனால் கதவை திறக்கவில்லை. அப்போது அந்த அறையில் பின்புற கதவு இருப்பது தெரியவந்தது. அங்கு சென்று போலீசார் பார்த்தபோது அறைக்குள் யாரும் இல்லை. சொகுசு படுக்கைகள் இருந்தன.

    தப்பியோட்டம்

    போலீசார் வருவதை அறிந்ததும் 4 பேரும் பின்புறம் வாசல் வழியாக தப்பியது தெரியவந்தது. இதையடுத்து அந்த கட்டிடத்தை வாடகைக்கு விட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    நடவடிக்கை

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், திருப்பூரில் ஸ்பா என்ற பெயரில் சிலர் விபசாரம் நடத்தி வருகின்றனர்.சம்பந்தப்பட்ட மசாஜ் சென்டருக்கு தினமும் இளம்பெண்கள், இளைஞர்கள் வருகின்றனர். அவர்கள் காரை வேறு இடத்தில் நிறுத்தி விட்டு வருகின்றனர். மசாஜ் சென்டருக்குள் செல்லும் அவர்கள் அரை மணி நேரம் கழித்து திரும்புவார்கள். எனவே விபசாரம் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×